ஜெயலலிதாவின் பிணை மனுவை உடனடியாக விசாரணை செய்ய மறுப்பு

ஜெயலலிதாவின் பிணை மனுவை உடனடியாக விசாரணை செய்ய மறுப்பு

ஜெயலலிதாவின் பிணை மனுவை உடனடியாக விசாரணை செய்ய மறுப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 7:57 pm

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பிணை மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்திய உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த பிணை மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பிணை மனு தொடர்பான கோரிக்கை, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ஹெச்.எல்.தத்து தலைமையிலான நீதியரசர் குழாம் முன்னிலையில்  இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.நரிமன் வாய்மொழி கோரிக்கை விடுத்த நிலையில், ஜெயலலிதா ஜெயராம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்