ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்?; விளக்கமளிக்கும் ஜோசப் மைக்கல் பெரேரா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்?; விளக்கமளிக்கும் ஜோசப் மைக்கல் பெரேரா

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 9:27 pm

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பொது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவராக இருக்க வேண்டும் என அந்தக் கட்சி சுட்டிக்காட்டுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படுமென, இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா குறிப்பிட்டார்.

[quote]மறுபுறத்தில் யார் என்பது குறித்து எமக்கு அறிவிக்கவில்லை. நாம் இப்போது பொது வேட்பாளர் ஒருவரை தீர்மானிப்போம். பொது வேட்பாளர் என்பதில் அரசாங்கம் ஒன்றை அமைக்கும் தன்மை ஐக்கிய ​தேசியக் கட்சிக்கு இருக்க ​வேண்டும். அந்த சக்தியோடு தான் ஏனைய அனைத்தும் இணைய ​வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய ​தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு தீர்மானிக்கும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்