செட்டிப்பாளையம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

செட்டிப்பாளையம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

செட்டிப்பாளையம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 1:52 pm

மட்டக்களப்பு செட்டிப்பாளையம் கடலில் தோணியொன்று உடைந்து சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் கடற்கரையிலிருந்து கடலுக்குச் சென்ற தோணி கடும் காற்றினால் உடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவத்தில் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது

காயமடைந்தவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஒலுவில் துறைமுக கடல் பகுதியில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் மேலும் சிலருடன் கடலில்  நீராடச் சென்றபோது நேற்று மாலை காணாமற்போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவத்தில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டவர், கல்முனை  வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்