ஏலியகொடையில் பாதையை புனரமைத்துத் தருமாறுகோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

ஏலியகொடையில் பாதையை புனரமைத்துத் தருமாறுகோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

ஏலியகொடையில் பாதையை புனரமைத்துத் தருமாறுகோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 1:08 pm

ஏலியகொடை பொலிஸ் பிரிவின் பரகடுவையிலிருந்து தெக்தெனிய செல்லும் பாதையை புனரமைத்துத் தருமாறுகோரி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதியின் பரகடுவ சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

சுமார் ஏழு கிலோமீற்றர் கொண்ட பாதையின் புனரமைப்புப் பணிகள் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டாலும் அந்தப் பணிகள் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.

பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் , பஸ் ஊழியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்