3 ஓட்டங்களால் கைகூடாமல் போன ஸ்மித்தின் 10 வருட கனவு

3 ஓட்டங்களால் கைகூடாமல் போன ஸ்மித்தின் 10 வருட கனவு

3 ஓட்டங்களால் கைகூடாமல் போன ஸ்மித்தின் 10 வருட கனவு

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2014 | 6:30 pm

இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பலரது கவனத்தை ஈர்த்தவர் டுவைன் ஸ்மித்

அதற்கு காரணம், ஸ்மித் நேற்றைய தினமும் தனது சதம் பெரும் வாய்ப்பினை இழந்தமையே!

கடந்த 10 வருடங்களாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி வரும் டுவைன் ஸ்மித், 92 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் இதுவரை ஒரு சதத்தினைக்கூட பூர்த்தி செய்ததில்லை

நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஸ்மித், 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்நிலையில், அவரது 10 வருட சதமடிக்கும் கனவு நேற்றும் கைகூடவில்லை.

நேற்று இடம்பெற்றது ஸ்மித்தின் 93ஆவது ஒரு நாள் போட்டியாகும், இதுவரை ஒரு சதம் கூட பெறாமல் 100 சர்வதேச ஒரு நாள்  போட்டிகளை நெருங்கிய முதல் வீரர் ஸ்மித்தாகத்தான் இருப்பார் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்