இறம்பைக்குளம் அந்தோனியார் திருத்தல தேர் தீக்கிரை

இறம்பைக்குளம் அந்தோனியார் திருத்தல தேர் தீக்கிரை

இறம்பைக்குளம் அந்தோனியார் திருத்தல தேர் தீக்கிரை

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2014 | 2:24 pm

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் பின்புறமாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரே எரியூட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்றிரவு தேருக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இன்று அதிகாலை பிரார்த்தனைக்காக  ஆலயத்திற்கு வந்தவர்களே தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் கதவு திறந்திருப்பதையும் அதனுள் இருந்து புகை வருவதையும் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அவர்கள் சென்றதுடன் தீயை கட்டுப்படுத்துவதற்கும் முயற்சித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தேரின் கீழ் பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்