19 வருடங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் ஷாருக்கின் திரைப்படம்

19 வருடங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் ஷாருக்கின் திரைப்படம்

19 வருடங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் ஷாருக்கின் திரைப்படம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 3:16 pm

ஹிந்தி சினிமாவில் என்பதுகளில் நிறைய படங்களில் ஜோடியாக நடித்து வெற்றி ஜோடிகளாக இன்றும் பேசப்பட்டு வருபவர்கள் ஷாருக்கான், கஜோல்.

இவர்களின் நடிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் 1995 ஒக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’. இப்படம் இன்னமும் மும்பையிலுள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது.

19 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த இப்படத்தை இந்த வருட இறுதியுடன் அந்த திரையரங்கிலிருந்து எடுக்க திரையரங்கு நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு காரணம் சமீபகாலமாக இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாம்.

இப்படம் வெளியாகி 1000 வாரங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய சினிமா சரித்திரத்திலேயே ஒரு பெரும் சாதனையாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்