‘ஹுட்ஹுட்’ சுழற்காற்றினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

‘ஹுட்ஹுட்’ சுழற்காற்றினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

‘ஹுட்ஹுட்’ சுழற்காற்றினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 7:51 pm

அந்தமான் தீவுகளுக்கு அருகில் உருவாகியுள்ள சுழற்காற்றுக்கு ஹுட்ஹுட் (hudhud) என பெயரிடப்பட்டுள்ளது.

ஓமான் வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகளால் சுழற்காற்றுக்கான பெயர் சூட்டப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தமான் தீவில் நிலைக்கொண்டுள்ள இந்த சுழற்காற்றானது இந்தியாவின் தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்வதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவை நோக்கி நகரும் சுழற்காற்று தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு துறையிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, ஹுட்ஹுட் சுழற்காற்று காரணமாக இலங்கைக்கும், தமிழகத்திற்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு துறையின் வானிலை அதிகாரி எஸ்.ரமணன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, அதிக மழைக் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரிழ் மூழ்கியுள்ளன.

குருவிட்ட, எலபத்த மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் நிமல் பியசிறி பண்டார தெரிவிக்கின்றார்.

எஹெலியகொட உடதலவில பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவியுள்ள ஐந்து வீடுகளிலுள்ள நபர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்