வருடத்தின் இறுதி சந்திரக் கிரகணம் இன்று தென்படும்

வருடத்தின் இறுதி சந்திரக் கிரகணம் இன்று தென்படும்

வருடத்தின் இறுதி சந்திரக் கிரகணம் இன்று தென்படும்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 9:11 am

இந்த வருடத்தின் இறுதி சந்திரக் கிரகணம் இன்று தென்படவுள்ளது.

இந்த கிரகணம் பகல்வேளையில் ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கையில் கிரகணம் தெளிவாக தென்படாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியரும், ஆதர் சி கிளார்க் நிலைய விண்வெளி ஆய்வு தொடர்பான ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.

இன்று தென்படவுள்ள பூரண சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.46க்கு ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் கிரணகத்தை தெளிவாக பார்வையிட முடியும் என அவர்  குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த சந்திர கிரகணத்தின் இறுதி கட்டத்தை பார்வையிடக்கூடிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிட்டவுள்ளதுடன், மாலை 6.00 மணி தொடக்கம் 6.03 வரையான 3 நிமிட காலப்பகுதியில் அதனை பார்வையிட முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்