வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் சூறாவளியாக மாறியது

வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் சூறாவளியாக மாறியது

வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் சூறாவளியாக மாறியது

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 12:40 pm

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சூறாவளி இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என அனுமானிக்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமாகாணத்தின் அநேகமான பகுதிகளில் இன்று மப்பும்மந்தாரமுமான வானிலை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவில் இன்று காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். கிளிநொச்சி பரந்தன் பகுதியிலும் இன்று கடும் காற்று வீசியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்