வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் வலுவடைகிறது; சீரற்ற வானிலை தொடரும்

வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் வலுவடைகிறது; சீரற்ற வானிலை தொடரும்

வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் வலுவடைகிறது; சீரற்ற வானிலை தொடரும்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 10:00 am

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் தாக்கத்தினால் நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது,.

கிழக்கு கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறித்த கடல் கொந்தளிப்பாக அமையலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை மாவட்டத்தில் தொடரும் கடும் மழையால் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையால் கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், சில குளங்களின் வான்கதவுகளை திறக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த குளங்களுடன் தொடர்புடைய ஆறுகளை அண்டிய பகுதிகளில்  மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்