யுவனின் வாய்ப்பை கைப்பற்றிய ”ஹிப் ஹொப் ஆதி”

யுவனின் வாய்ப்பை கைப்பற்றிய ”ஹிப் ஹொப் ஆதி”

யுவனின் வாய்ப்பை கைப்பற்றிய ”ஹிப் ஹொப் ஆதி”

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 10:39 am

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துவரும் ‘ஆம்பள’ படத்தில் யுவனுக்கு பதிலாக தற்போது ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஷால், ஹன்சிகா, வைபவ், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘ஆம்பள’. சுந்தர்.சி இயக்கி வரும் இப்படத்தை விஷால் நடித்து, தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படம் அறிவிக்கப்பட்டபோது, யுவன் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால், யுவன் தொடர்ச்சியாக படங்கள் ஒப்புக் கொண்டதால் ‘ஆம்பள’ படத்திற்கு இசையமைக்க முடியவில்லை. படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதால் தற்போது ‘ஹிப் ஹொப் ஆதி’ இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இது தொடர்பில் விஷால் தெரிவிக்கையில், “பொங்கலுக்கு படம் வெளியாக இருப்பதால், யுவன் இசையமைக்க முடியவில்லை. அவர் தொடர்ச்சியாக வெவ்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனால், தற்போது ஹிப் ​ெ
ஹொப் ஆதி இசையமைக்க இருக்கிறார். ஹிப் ஹொப் ஆதி இசையமைப்பில் சி.வி.குமார் தயாரிக்கவிருக்கும் படத்திற்கு முன்பாகவே எங்களது படம் வெளியாகிவிடும். ஹிப் ஹொப் ஆதி இசையில் வெளியாகும் முதல் படமாக ‘ஆம்பள’ இருக்கும்” என்றார்.

தற்போது ‘ஆம்பள’ படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஷால், ஹன்சிகா உள்ளிட்ட மொத்த படக்குழுவும் ஊட்டியில் முகாமிட்டு இருக்கிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்