மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் இலங்கை, இந்திய அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும்

மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் இலங்கை, இந்திய அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும்

மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் இலங்கை, இந்திய அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 8:59 am

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு இருநாட்டு அரசுகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் படகுகளுக்கான நிவாரணங்களை வழங்குமாறு தெரிவித்து இந்திய மத்திய அரசிடம் மகஜர் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழக கரையோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பீ.ஜெசுதாஸன் தெரிவிக்கின்றார்.

இராமேஷ்வரத்தில் நேற்று நடைபெற்ற மீனவர் சங்கங்களின் தலைவர்களின் அவசர ஒன்று கூடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்தது போல அவர்களது படகுகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக கரையோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பீ.ஜெசுதாஸன் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்