மியன்மார் கடற்பரப்பில் நிர்க்கதியான மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

மியன்மார் கடற்பரப்பில் நிர்க்கதியான மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

மியன்மார் கடற்பரப்பில் நிர்க்கதியான மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 3:08 pm

கடும் காற்றினால் கரைதிரும்ப முடியாமல் நிர்க்கதியான இலங்கை மீனவர்கள் மியன்மார் கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மியன்மார் கரையிலிருந்து சுமார் 100 கடல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்களின் படகுகள் உள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.

இதனால் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது பிரச்சினைகள் எதுவும் கிடையாதென கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

கடலில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மியன்மார் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவசர நிலைமையின்போது மீனவர்கள் கரை திரும்புவதற்காக மியன்மார் இரண்டு தீவுகளை பெயரிட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மியன்மார் கடற்பரப்பில் தற்போதுள்ள 32 படகுகளில் சுமார் 180 இலங்கை மீனவர்கள் இருப்பதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்