மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை; நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறப்பு (Photos)

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை; நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறப்பு (Photos)

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை; நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறப்பு (Photos)

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 2:21 pm

விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.

அத்துடன் ஏனைய நீர்த்தேக்கங்களும் வான் மட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் இன்னும் சில மணித்தியாலங்களில் குறித்த நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகளை திறக்க நேரடலாம் என்பதால், களனி கங்கைக்கு இருமருங்கிலும் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

மஸ்கெலியா, லக்ஸபான, நோட்டன், நோட்டன் பிரிஜ், நல்லதன்னி ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்துள்ளது.

இதனால் அநேகமான நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் கூறுகின்றார்.

மாவட்டத்தில் 259 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மாத்தறை பகுதியில் பெய்த மழையால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.

தொடர்ந்தும் கடும் மழை பெய்யும் பட்சத்தில் கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

nuwaraeliya weather_5 nuwaraeliya weather_4 nuwaraeliya weather_3 nuwaraeliya weather_2 nuwaraeliya weather_1
Photos by:- G.Krishanthan – Patana


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்