புத்தளத்தில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது

புத்தளத்தில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது

புத்தளத்தில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 7:39 pm

புத்தளம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் மீது முந்தல் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதை பொருள் விற்பனை தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய இன்று முற்பகல் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்த உத்தியோகத்தர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் சேசாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலின் போது குற்றத் தடுப்பு பிரிவு உத்தியோகஸ்தர்களை  மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படும் இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களான இரண்டு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்