நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பாரிய மண்சரிவு (Photos)

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பாரிய மண்சரிவு (Photos)

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பாரிய மண்சரிவு (Photos)

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 12:51 pm

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பங்களாஹத பகுதியில் மண் மேடொன்று சரிந்து விழுந்துள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வீதியிலுள்ள மண்ணை அகற்றி போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் மூன்று மணித்தியாலத்திற்கும் மேல் தேவைப்படலாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதனால் ஹட்டனிலிருந்து நுவரெலியாவுக்கு வாகனங்களை செலுத்துவதற்காக தலவாக்கலை பூண்டலேயா ஊடாக தவலன்தென்ன வீதியை பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

nanuoya new
Photos by: News1st u-reporter : Wijayasiri Smarasekara – NuwaraEliya

11 10 9 8
Photos by:- G.Krishanthan – Patana


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்