தென்கொரியாவில் காணாமற்போன இலங்கை வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் தொடர்பில் விசாரணை

தென்கொரியாவில் காணாமற்போன இலங்கை வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் தொடர்பில் விசாரணை

தென்கொரியாவில் காணாமற்போன இலங்கை வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 7:44 pm

தென்கொரியாவில் வைத்து காணாமல் போன இலங்கை மெய்வல்லுநர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேரைத் தேடும் நடவடிக்கைளில் அந்த நாட்டுப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கென சென்ற இலங்கை, நேபாளம் பங்களாதேஷ் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மெய்வல்லுநர்களே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் சட்டவிரோதமாக வேலைவாய்பொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என இன்சோன் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தரகர்கள் அல்லது வேறு எவராவது காணாமல் போன மெய்வல்லுநர்களுக்கு உதவி புரிந்திருக்கலாம் எனவும் தென்கொரியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன மெயவல்லுநர்கள் தொடர்பில் குடிவரவு அலுவலகம் தகவல்களைச் சேகரித்துள்ளதாகவும் இது தொடர்பான குடிவரவு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் அவர்களுக்கான வீசா நிறைவடைவதாகவும் அதன் பின்னரும் நாட்டில் தங்கிருந்தால் சட்டவிரோதமாக தங்கிருக்கும் வெளிநாட்டவர்களாக கருதி அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தென்கொரிய அதிகாரிகள் கூறியுள்ளளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்