கொழும்பிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானத்தில் திருட்டு

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானத்தில் திருட்டு

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானத்தில் திருட்டு

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 2:43 pm

கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த விமானத்தில் சக பயணியின் பணத்தைக் கொள்ளையிட்ட ஒருவருக்கு 08 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த கனேடிய பிரஜையின் பையிலிருந்து 175 டொலர்களை திருடியதாக, சீன பிரஜை ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சந்தேகநபர் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதால் அவருக்கு குறைந்தபட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் விடுமுறை கழித்து சிங்கப்பூருக்கு செல்லும் வழியில்  சந்தேகநபரான சீனப் பிரஜை பணத்தை கொள்ளையிட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்