கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி 2 நாட்களின் பின் சடலமாக மீ்ட்பு

கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி 2 நாட்களின் பின் சடலமாக மீ்ட்பு

கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி 2 நாட்களின் பின் சடலமாக மீ்ட்பு

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 4:33 pm

பெங்களூரில் கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்த 9 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழத்தைச் ​சேர்ந்த கீதா லக்ஷ்மி என்ற சிறுமி, கடந்த திங்களன்று தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீதியில் நடந்து செல்கையில் குறித்த சிறுமி திறந்த நிலையில் காணப்பட்ட கழிவு நீர் வாய்க்காலில் வீழ்ந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பொலிஸார், தீயணைப்பு படையினர் இணைந்து சிறுமியை மீட்க மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை

இந்நிலையில், சடலம் சிறுமி தவறி விழுந்த இடத்திலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குளம் ஒன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் தவறி விழுந்த சிறுமி வாய்க்கால் வழியாக அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Source :- NDTV


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்