ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; 7 தபால் ரயில் சேவைகள் இரத்து

ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; 7 தபால் ரயில் சேவைகள் இரத்து

ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; 7 தபால் ரயில் சேவைகள் இரத்து

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2014 | 5:22 pm

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் உள்ளிட்ட அனைத்து ரயில்வே ஊழியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று இரவு சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த 07 தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொழும்பிலிருந்து பளை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பதுளை நோக்கி இன்றிரவு பயணிக்க இருந்த தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பினால் பயணிகள் எதிர்நோக்கக் கூடிய அசௌகரியங்களை கருத்திற் கொண்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தலைமை ரயில்வே கட்டுப்பாட்டாளர் டி.வீ.குணபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் டி.வீ.குணபால குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலை பெறுவதற்கு போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களத்தை தொடர்பு கொள்வதற்கு நியூஸ்பெஸ்ட் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்