மைக்கல் பெல்ப்ஸுக்கு ஆறு மாதத் தடை

மைக்கல் பெல்ப்ஸுக்கு ஆறு மாதத் தடை

மைக்கல் பெல்ப்ஸுக்கு ஆறு மாதத் தடை

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 11:49 am

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அமெரிக்க நீச்சல் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான மைக்கல் பெல்ப்ஸுக்கு 6 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் மது அருந்தி விட்டு காரை செலுத்தியமைக்காக பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

மைக்கல் பெல்ப்ஸ் மது அருந்தி விட்டு காரை செலுத்தியதுடன் போல்டிமோர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் வேகமாக பயணித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பின்னர், அமெரிக்க நீச்சல் கழகம் பெல்ப்ஸ் மீது தடை விதித்துள்ளது.

பெல்ப்ஸ் சர்வதேச நீச்சல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர் வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மைக்கல் பெல்ப்ஸ் 18 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனையாளராக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்