‘மங்கள்யான்’ தொடர்பான கேலிச்சித்திர சர்ச்சை; மன்னிப்பு கோரியது  நியுயோர்க் டைம்ஸ்

‘மங்கள்யான்’ தொடர்பான கேலிச்சித்திர சர்ச்சை; மன்னிப்பு கோரியது நியுயோர்க் டைம்ஸ்

‘மங்கள்யான்’ தொடர்பான கேலிச்சித்திர சர்ச்சை; மன்னிப்பு கோரியது நியுயோர்க் டைம்ஸ்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 10:41 am

செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது.

‘பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு’ என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே ஒரு விவசாயி பசுமாட்டுடன் வந்து கதவைத் தட்டுவதுப் போல இந்தியாவை அப்பத்திரிகை சித்தரித்திருந்தது.

இந்த சர்ச்சை குறித்து பேஸ்புக் பதிவொன்றின் மூலம் எழுதிய நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசெந்தால், இந்த கேலிச்சித்திரம் விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்படி பணக்கார மேலை நாடுகளின் பிரத்தியேக வெளியாக இனி இல்லை என்பதைக் காட்டவே வரையப்பட்டது என்று கூறி, இந்தக் கேலிச்சித்திரத்தினால் புண்பட்டிருக்கும் வாசகர்களிடம் மன்னிப்பைக் கோரினார்.

இந்தியாவின் இந்த மங்கள்யான் திட்டம் 74 மில்லியன் டொலர்கள் செலவில் நிறைவேற்றப்பட்டது. இது வரை அனுப்பப்பட்ட வேற்றுக் கிரக விண்வெளி திட்டங்களில் இதுவே மிகவும் குறைந்த செலவில் இடம்பெற்ற திட்டமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்