பொங்கல் வெளியீடாக ”தல55”; தீபாவளிக்கு முன்பதாக டீசர்

பொங்கல் வெளியீடாக ”தல55”; தீபாவளிக்கு முன்பதாக டீசர்

பொங்கல் வெளியீடாக ”தல55”; தீபாவளிக்கு முன்பதாக டீசர்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 12:40 pm

கௌதம் மேனன் இயக்கத்தில் ”தல55” படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. நேற்றைய தினம் படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் அஜித் தோன்றும் அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அனைத்தும் பணிகளும் சிறப்பாக நடந்தால், படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ மற்றும் ‘டீஸர்’ தீபாவளிக்கு முன்பே வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்திருக்கிறது.

அதேபோல் படம் எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாவதற்கான அனைத்து வேலைகளையும் தயாரிப்புத் தரப்பு ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த வருட ஆரம்பத்தில் பொங்கலை முன்னிட்டு சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ படம் ஜனவரி 10ஆம் திகதி வெளியானது. படத்திற்கும் பலத்த வரவேற்பு கிடைத்தது. தற்போது இதேபோல், கௌதம் மேனன் படத்தையும் பொங்கல் தினத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான ஜனவரி 9ஆம் திகதியில் வெளியிடலாம் என்ற எண்ணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்