தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் சுழல் காற்றாக மாறலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் சுழல் காற்றாக மாறலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் சுழல் காற்றாக மாறலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 9:57 am

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் ஓரிரு தினங்களில் வலுவடைந்து சுழல் காற்றாக மாறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தற்பொழுது மணித்தியாலயத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும், ஓரிரு தினங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளதாகவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி தெரிவித்தார்.

இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத போதிலும், ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நாட்டிற்கு அப்பால் பயணிப்பதாகவும், அதனால் பாரியளவு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்