தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் சரீரப் பிணையில் விடுதலை

தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் சரீரப் பிணையில் விடுதலை

தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் சரீரப் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 3:10 pm

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்ட தியாகராசா துவாரகேஸ்வரன் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் நேற்று மாலை சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு ஏ9 வீதி வழியாக செல்லாமல், மாற்று வழியில் சென்றதால் குறித்த பஸ்ஸை பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.

இதன்போது போக்குவரத்து சட்டத்திற்கு அமைய பொலிஸார் தண்டச் சீட்டொன்றை வழங்கியுள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த துவாரகேஸ்வரன், பொலிஸர் வழங்கிய தண்டச் சீட்டை கிழித்தெறிந்துள்ளதுடன், அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதற்கமைய கைதுசெய்யப்பட்ட அவர் யாழ். நீவவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தியாகராசா துவாரகேஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரராவார்.

இவர் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்