ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு மீதான விசாரணை இன்று

ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு மீதான விசாரணை இன்று

ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு மீதான விசாரணை இன்று

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 9:08 am

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிணை மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிணை மனு மீதான விசாரணை மதியம் இடம்பெறவுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜெயலலிதா ஜெயராம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானியும், அரச தரப்பில் பவானி சிங்கும் இந்த வழக்கில் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதா ஜெயராமிற்கு நான்காண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி இந்திய ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ஏற்கனவே இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதா ஜெயராம், பார்ப்பன – அக்ரஹார சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜெயலலிதா ஜெயராம், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்