ஜெயலலிதாவின் பிணை மனுவை முதலாவதாக விசாரிக்க மறுத்த நீதிமன்றம்

ஜெயலலிதாவின் பிணை மனுவை முதலாவதாக விசாரிக்க மறுத்த நீதிமன்றம்

ஜெயலலிதாவின் பிணை மனுவை முதலாவதாக விசாரிக்க மறுத்த நீதிமன்றம்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 12:13 pm

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுவை முதலாவது மனுவாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பான அக்ரஹார சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வருக்கும் பிணை வழங்குமாறு கோரியும், தண்டனையை இரத்துச் செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெங்களூரிலுள்ள முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதா ஜெயராம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை என்பன அமைந்துள்ள பகுதிளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிணை வழக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று முதல் மனுவாக விசாரிக்குமாறு கர்நாடகா உயர்நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் பிணை மனு வரிசை எண்ணுக்கு அமைய 73 ஆவது வழக்காக ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் பிணை மனு விசாரிக்கப்படவுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதுடன் அரச தரப்பில் பவானி சிங் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்