ஐரோப்பா மீன் சந்தை இழக்கப்படும் அபாயம்;இலங்கை மீனவ சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர்

ஐரோப்பா மீன் சந்தை இழக்கப்படும் அபாயம்;இலங்கை மீனவ சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர்

ஐரோப்பா மீன் சந்தை இழக்கப்படும் அபாயம்;இலங்கை மீனவ சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 9:21 am

ஐரோப்பா மீன் சந்தையை இழக்கும் அபாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மீனவ சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவிக்கின்றார்.

இலங்கையின் மீன்பிடி துறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளமையே இதற்கு காரணம் என அவர் கூறுகின்றார்.

இலங்கை மீன் ஏற்றுமதியில் 60 வீதம் ஐரோப்பா சந்தையை இலக்காகக் கொண்டமைந்துள்ளதாக அகில இலங்கை மீனவ சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே சுட்டிக்காட்டுகின்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் இலங்கையிடம் 72 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இதன்போது இரண்டு மாதங்களுக்குள் இந்த பரிந்துரைகள் தொடர்பில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்காத பட்சத்தில், இலங்கையின் மீன் ஏற்றுமதியை எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய நாடும் ஏற்காது என அரசாங்கம் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதாக தேசிய அமைப்பாளர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இடம்பெற்றால் அது இலங்கையின் மீன்பிடித் துறை, மீன்பிடி துறைசார் வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை மீனவ சம்மேளனம் சுட்டிக்காட்டுகின்றது.

எவ்வாறாயினும், அவ்வாறான நிலை காணப்படவில்லை என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

ஐரோப்பா ஒன்றியம் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்னர், அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை இலங்கை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்