இந்திய ஒரு நாள் அணி விபரம் அறிவிப்பு

இந்திய ஒரு நாள் அணி விபரம் அறிவிப்பு

இந்திய ஒரு நாள் அணி விபரம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2014 | 8:43 am

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒரு நாள் கிரிகெட் ​தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் உபாதை காரணமாக ரோஹித் ஷர்மா விளையாடாத நிலையில், அஷ்வினுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

சம்பியன் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் குலதீப் யாதவ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை அமித் மிஸ்ராவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்த சஞ்சு சம்சன், ஸ்டுவட் பின்னி, தவன் குல்கர்னி, கர்ன் ஷர்மா ஆகியோர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

 மஹேந்திர சிங் தோனி தலைமையில் விராத் கோலி, சிகர் தவான், அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, அம்பாத்தி ராயுடு, அமித் மிஷ்ரா, புவனேஸ்வர் குமார், மொஹமட் சமி, மோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குலதீப் யாதவ் ஆகியோர் ஆணியில் இடம் பிடித்துள்ளனர்.
இரு அணிகளுக்குமிடையிலான  5 போட்டிகளைக், கொண்ட சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்