MH370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

MH370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

MH370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 4:30 pm

காணாமல் போன MH370  பயணிகள் விமானத்தை தேடும் அடுத்த கட்டப் பணிகள் இந்து சமுத்தரத்தின் தென்பிராந்தியத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமானம் காணாமல் போனதாக நம்பப்படும் குறித்த கடற்பரப்பை விசேட தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பல்  சென்றடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த மார்ச் மாதம் மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் காணாமல் போயிருந்தது.

சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் கடல் மற்றும் வான்வெளி தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை குறித்த விமானம் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்