ஹஜ் பெருநாளைக் கொண்டாடிய இலங்கைவாழ் முஸ்லிம்கள்

ஹஜ் பெருநாளைக் கொண்டாடிய இலங்கைவாழ் முஸ்லிம்கள்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 9:15 pm

தியாகத் திருநாளான புனி ஹஜ் பெருநாளை முன்னிட்டு நட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் விசேட தொழுகைகளில் ஈடுபட்டனர்.

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் இன்று விசேட தொழுகைகள் இடம்பெற்றன.

முஸ்லிம்களின் இரண்டு பெருநாள்களில் தியாகத்தை வலியுருத்தும் பெருநாளான ஈதுல் அல்ஹா என்றழைக்கப்படும் ஹஜ் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று கொண்டாடினர்.

திருகோணமலை பெரிய கிண்ணியா மற்றும் சின்னக் கிண்ணியா பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை வவுனியா பட்டானிச்சூரில் இன்று காலை இடம்பெற்றது.

வவுனியா தௌகீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் தொழுகைகள் இடம்பெற்றன.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட தொழுகைகளிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை மஸ்ஜிதுல் பறகத் பள்ளிவாசல் ஏற்பாடு செய்த திறந்தவெளி பெருநாள் தொழுகை பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது.

இதில் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தர்.

அம்பாறை அட்டாளைச்சேனை மஜ்ஜிதுல் பலாஹ்வில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புத்தளம் – கொத்தாந்தீவு முகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற தொழுகை மற்றும் விசேட துஆப் பிரார்த்தனைகளிலும பெருமளவான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை மலையகத்திலும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்