மோடியின் திட்டத்தில் இணைந்து வீதியினை சுத்தம் செய்த சச்சின்

மோடியின் திட்டத்தில் இணைந்து வீதியினை சுத்தம் செய்த சச்சின்

மோடியின் திட்டத்தில் இணைந்து வீதியினை சுத்தம் செய்த சச்சின்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 12:43 pm

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்துள்ளார்.

மோடியின் அழைப்பை ஏற்ற சச்சின் இந்த திட்டத்தில் இணைந்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 145ஆவது பிறந்த தினத்தில் ‘தூய்மை இந்தியா’ என்னும் திட்டத்தை பிரதமர் மோடி ஆரம்பித்தார்.

இந்த விழிப்புணர்வு திட்டத்தில் பங்கேற்குமாறு சச்சின் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை, பிரியங்கா சோப்ரா, கமல் ஹாசன், சசி தரூர் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

சச்சின் துடைப்பத்துடன் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தில் இணைந்துள்ளார். மும்பையிலுள்ள வீதியினை அவர் சுத்தம் செய்தார். அவருடன் அவரது ரசிகர்களும் இணைந்துகொண்டனர்.

“பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியால் ‘தூய்மை இந்தியா’ பிரசாரத்தில் எனக்கு தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நான் இங்கு எனது குழுவுடன் இங்கு வந்துள்ளேன். நாங்கள் இந்த பகுதியினை சுத்தம் செய்வோம்.” என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்