முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 7:46 pm

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் பெரிய பள்ளிவாசலினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளதாக, அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி பிரிவின் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்..

புனித ஹஜ்பெருநாள் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்