மண் இயக்குனரின் அடுத்த படைப்பு ‘யாவும் வசப்படும்’ (Video)

மண் இயக்குனரின் அடுத்த படைப்பு ‘யாவும் வசப்படும்’ (Video)

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 5:33 pm

இலங்கை இந்தியக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான ‘மண்’ திரைப்படத்தை இயக்கிய, புதியவனின் அடுத்த படைப்பே ‘யாவும் வசப்படும்’.

மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜித், தில்மிகா, பாலா, வைபவி, ரமேஷ், பாபி, டொக்டர் விவேக், ஆண்ட்ரு, கண்ணன், சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்ய ஆர்.கே.சுந்தர் இசை அமைக்க பாடல் வரிகளை தீபச்செல்வன் எழுதியுள்ளார்.

ஜரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ள கொடூரமான கடத்தல்கள் பற்றிய திரில்லர் கலந்த உத்வேகமான திரைக்கதை கொண்ட இந்தப் படம் முழுக்க முழுக்க லண்டனில் உருவாகப்பட்டது.

இலங்கையின் கனகராயன்குளத்தை சேர்ந்த இயக்குனர் புதியவனின் யாவும் வசப்படும் திரைப்படம் எதிர்வரும் 10ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்