‘பாடசாலைகளில் நிலவும் இராணுவத் தலையீட்டினை தடுக்க வேண்டும்’ யாழில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

‘பாடசாலைகளில் நிலவும் இராணுவத் தலையீட்டினை தடுக்க வேண்டும்’ யாழில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 9:21 pm

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், 15 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலாலி ஆசிரியர் கலாசாலையை உடனடியாக திறத்தல், தமிழ் மொழியிலான சுற்றுநிரூபத்தை வெளியிடுதல், வட மாகாண பாடசாலைகளில் நிலவும் இராணுவத் தலையீட்டினை தடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில் சிலர் கோஷங்களை எழுப்பியதாகவும், பின்னர் குறித்த தரப்பினர் கலைந்து சென்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்