தியத்தலாவை மற்றும் மொனராகலையில் ஆலங்கட்டி மழை

தியத்தலாவை மற்றும் மொனராகலையில் ஆலங்கட்டி மழை

தியத்தலாவை மற்றும் மொனராகலையில் ஆலங்கட்டி மழை

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 10:02 pm

தியத்தலாவ மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இன்று நண்பகல் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

இன்று நண்பகல் ஆலங்கட்டி மழை பெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதேவேளை வீடுகளிற்கு மேல் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடும் காற்று காரணமாக தியத்தலாவை பொலிஸ் நிலையத்தின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன.

தியத்தலாவையின் பல பகுதிகளில் மின்சாரம் தூண்டிக்கப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்