தார் நிரம்பிய குழிக்குள் விழுந்த நாய் உயிர் பிழைத்த கதை (Video)

தார் நிரம்பிய குழிக்குள் விழுந்த நாய் உயிர் பிழைத்த கதை (Video)

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 4:59 pm

தார் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்த நாய் ஒன்று காப்பாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி YouTubeஇல் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. நாய் ஒன்று தார் நிரம்பிய குழிக்குள் விழுந்ததால் உடல் முழுமையாக தாரினால் மறைக்கப்பட்டது. இதனால் நாய் மூச்சுவிடக்கூட கஷ்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்வதறியாது தடுமாறிய நாய்க்கு உதவ Animal Aid Unlimited  என்ற அமைப்பினர் முன்வந்தனர்.

மூன்று மணித்தியால போராட்டத்தின் பின்னர் குறித்த நாயின் உடலில் ஒட்டியிருந்த தார் முழுமையாக மரக்கறி எண்ணெயை பயன்படுத்தி Animal Aid Unlimited  அமைப்பினர் அகற்றியதோடு, நாயின் உயிரையும் காப்பாற்றியுள்ளனர்.

இந்த காணொளி தற்போது YouTube பெரிய வரவேற்பை பெற்றுள்ளதுග


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்