சிலாபத்தில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையை கைதுசெய்ய நடவடிக்கை

சிலாபத்தில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையை கைதுசெய்ய நடவடிக்கை

சிலாபத்தில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையை கைதுசெய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 7:50 pm

சிலாபம் – மாதம்பை தம்பகல்ல பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சந்தேகநபரான குறித்த சிறுமியின் தந்தை பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது தந்தையால் கடந்த இரண்டு வருடங்களாக தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த சிறுமி பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிறுமிக்கு சிகிச்சை பெறுவதற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அவள் கர்ப்பமடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிலாபம் வைத்தியசாலையின் வைத்தியர்களால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய மாதம்பை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்