சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டமைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டமைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டமைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 3:26 pm

சப்ரகமுவ பல்கலைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டதை கண்டித்து இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பதுளை கொழும்பு பிரதான வீதியின் பம்பஹின்ன சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சப்ரகமுவ பல்லைக்கழகம் காலவரையரையின்றி மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க தெரிவி்துள்ளார்.

இதேவேளை, சப்ரகமுவ பல்லைக்கழகத்தை காலவரையரையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுத்தது

மாணவிகள் சிலர் பலவந்தமாக மாணவர் விடுதிக்குள் பிரவேசித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்தன பீ உடவத்த தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்