கோபியின் மனைவி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – அஜித் ரோஹன

கோபியின் மனைவி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – அஜித் ரோஹன

கோபியின் மனைவி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – அஜித் ரோஹன

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 7:57 pm

வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த 02 பெண்கள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தப் பெண்கள் இருவரும் போலியான தகவல்களை வழங்கியதால் திருப்பியனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சுவிட்ஸர்லாந்துக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைதந்திருந்த இரண்டு பெண்களின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளை கண்காணித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

[quote]ஒரு பெண் கோபியின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் பயங்கரவாதத்திற்கு புத்துயிர் அளிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரி.ஈ அமைப்பில் செயற்பட்டவரே கோபி. அவரது மனைவி புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன், ஏதேனுமொரு விடயத்திற்காக வெளிநாடு செல்வதற்கு தயாராகவிருந்தார். அவரது வாக்குமூலத்திற்கு அமைய, தனது  கணவர் அனுராதபுரத்தில் புற்றுநோயினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கோபியின் மரணத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பெண் என்பது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து  குடிவரவு, குடியகல்வு சட்டங்களுக்கு அமைய, அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று அந்த விமானத்தில் மற்றுமொரு பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் சுவிட்ஸர்லாந்து செல்வதற்கு முயற்சித்திருந்தார். அவர் எல்.ரீ.ரி.ஈயில் இருந்த பெண். அவர்கள் இருவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.[/quote]

இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கூறப்பட்டுவரும் கோபியின் மனைவியின் தந்தையிடம் இந்த விடயம் தொடர்பில் வினவியபோது, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சான்றுப் பத்திரத்துடன் வருகைதருமாறு பொலிஸார் தமது மகளுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்