கிறிஸ் நோனிஸ் தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் கருத்து

கிறிஸ் நோனிஸ் தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் கருத்து

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 8:35 pm

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் தொடர்பாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருணாகலில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து  வெளியிட்டார்.

[quote]கிறிஸ் நோனிஸ் தொடர்பில் இதுவரையில் பேசியிராத, கிறிஸ் நோனிஸின் முகத்தை கூட கண்டிராதவர்கள் இன்று ஊடகங்களின் முன்னால் வந்து அவர் தாக்கப்பட்டதாக கூறுகின்றனர். அவர் திறமையானவர். எனினும் இதுதான் ஜனநாயகமா என நாங்கள் எமக்குள் முரண்பட்டு கொள்கின்றோம். இன்று கிறிஸ் நோனிஸிற்காக இவர்கள் முன்னின்று செயற்படுகின்றனர். ஜனாதிபதிக்கு சேறுபூசுவதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர். பாப்பரசரை இலங்கைக்கு அழைப்பதற்காக சஜின் வாசை ஜனாதிபதி அங்கு அழைத்துச் சென்றதாக கூறி சேறு பூசுகின்றனர். அமெரிக்காவில் சண்டையிட்டு கொண்டதால் அங்குள்ள பொலிஸில் முறைப்பாடு செய்திருக்க வேண்டும். நம் நாட்டிற்காக செயற்பட்டமைக்காக கிறிஸ் நோனிஸை நாம் பாராட்டிய பல சந்தர்பங்கள் உள்ளன. எனினும் சிறுபிரச்சினை ஏற்பட்டு சண்டையிட்டு கொண்டதாக கூறுகின்றனர். இங்கும் எத்தனையோ மோதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன தானே.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்