கட்டடத்தின் மாடியிலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு; மது அருந்தியிருந்தமையும் உறுதி

கட்டடத்தின் மாடியிலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு; மது அருந்தியிருந்தமையும் உறுதி

கட்டடத்தின் மாடியிலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு; மது அருந்தியிருந்தமையும் உறுதி

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 6:07 pm

கொழும்பு புறக்கோட்டை மெசன்ஞர் வீதியில் உள்ள கட்டடம் ஒன்றின் நான்காம் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவ தெறேசியா தோட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞனே மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது நண்பர்களுடன் இணைந்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கட்டடத்தின் நான்காம் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து நேற்று மாலை 5.30 அளவில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மதுபானம் உட்கொண்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

தேசிய வைத்தியசாலையில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை மெசன்ஞர் வீதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் குறித்த இளைஞன் பணியாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்