ஒரேநாளில் இபோலா தொற்றுக்கு 121 பேர் பலி

ஒரேநாளில் இபோலா தொற்றுக்கு 121 பேர் பலி

ஒரேநாளில் இபோலா தொற்றுக்கு 121 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 12:28 pm

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோனில் ஒரேநாளில் இபோலா வைரஸ்சினால் பீடிக்கப்பட்டு 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரேநாளில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.

அத்துடன் சியரா லியோனில் இபோலா வைரஸ்சினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 678 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக கினியாவில் இபோலா வைரஸ் கண்டறியப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அயல்நாடுகளான லைபீரியா மற்றும் சியரா லியோனில் பரவி வரும் இந்த வைரஸினால் இதுவரை 3,439 பேர் பலியாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்