ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்பட தலிபான்கள் இணக்கம்

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்பட தலிபான்கள் இணக்கம்

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்பட தலிபான்கள் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 11:35 am

ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாக பாகிஸ்தான் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் ஐஎஸ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வழக்கும் பொருட்டு ஜிகாத் ஆயுததாரிகளை ஈராக் மற்றும் சிரியாவிற்கு அனுப்புவதாகவும் தலிபான் இயக்கம் கூறியுள்ளது.

பெரும் நன்மைக்காக மத்திய கிழக்கிலுள்ள அனைத்து போராட்டகாரர்களும் ஒன்றிணைய வேண்டும் என பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ள ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால் அல் கைதா இயக்கமும் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்