இரண்டு வருடங்களில் சேரி புறங்கள் ஒழிக்கப்படும்; ஜனாதிபதி உறுதி

இரண்டு வருடங்களில் சேரி புறங்கள் ஒழிக்கப்படும்; ஜனாதிபதி உறுதி

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 8:04 pm

2016 ஆம் ஆண்டு நாட்டிலுள்ள சேரி புறங்களை அகற்றி, அதற்குப் பதிலாக அனைவருக்கும் வீடுகளில் வசிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது, ஜனாதிபதி இதனைக் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் வீடு கிடைக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்காக அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிறார்களுக்கு சிறந்த வாழ்வை பெற்றுக்கொடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும், போதைப்பொருட்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் பொறுப்பை உரியவகையில் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது, பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ஸவினால் தேசிய வீடமைப்பு கொள்கைப் பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்