ஆறு மாவட்டங்களில், 38 பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களில், 38 பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களில், 38 பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 7:43 pm

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் 38 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 18 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிலையத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் எச்சரிக்கை முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தலா நான்கு பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் மண்சரிவு எச்சரிக்கையுள்ள பகுதிகளை கண்டறிவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பூர்வாங்க ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.

இதேவேளை, தியத்தலாவ மற்றும் மொனராகலையில் இன்று மதியம் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்