அபார வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா

அபார வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா

அபார வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2014 | 11:23 am

பாகிஸ்தான் அணிக்கெதிரான சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

97 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை எட்டியது.

போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய க்ளன் மெக்ஸ்வெல் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்