விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

விடுதலையான தமிழக மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 5:49 pm

இலங்கையில் விடுதலை  செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேர் இன்று சர்வதேச கடல் எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .

காரைக்கால், இராமேஸ்வரம் மற்றும் பூம்புகார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த    மீனவர்களே இன்று முற்பகல் இந்திய கடற்படையிடம்  ஒப்படைக்கப்பட்டதாக  த  ஹிந்து செய்தி வெயிளிட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ள 40 மீனவர்களும் இன்று மாலை மண்டபம் துறைமுகத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடற்பிராந்தியங்களில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த 40 மீனவர்களும் செப்டம்பர் 30 ஆம் திகதியும் ஒக்டோபர் முதலாம் திகதியும் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்