யால தேசிய விலங்குகள் சரணாலயம் மூடப்படுகிறது

யால தேசிய விலங்குகள் சரணாலயம் மூடப்படுகிறது

யால தேசிய விலங்குகள் சரணாலயம் மூடப்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2014 | 9:44 am

யால தேசிய சரணாலயத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்து மூடுவதற்கு வனிவிலங்குகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை யால சரணாலயத்தை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் வரட்சி தொடர்ந்தும் நீடிப்பதால், இந்த சரணாலயத்தை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்குகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச். டி. ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

கடந்த நாட்களில் சரணாலய பகுதிக்கு எதிர்ப்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி கிட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் நாட்களில் போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்கின்ற பட்சத்தில், சரணாலயத்தை குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாகவே திறக்க முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்